புதுச்சேரியில் சிறப்பு அஞ்சல் உறைகளை வெளியிட்டார் ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி தலைமை தபால் நிலையம் சார்பில் சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியீட்டு நிகழ்ச்சி  ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரியில் சிறப்பு அஞ்சல் உறைகளை வெளியிட்டார் ஆளுநர் தமிழிசை
புதுச்சேரியில் சிறப்பு அஞ்சல் உறைகளை வெளியிட்டார் ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: புதுச்சேரி தலைமை தபால் நிலையம் சார்பில் சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியீட்டு நிகழ்ச்சி  ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சிறப்பு அஞ்சல் உறைகனை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில், சென்னை மண்டல அஞ்சல்துறை இயக்குநர் கே. சோமசுந்தரம், சென்னை நகர அஞ்சல்துறை தலைமை அதிகாரி ஆர். வீணா ஸ்ரீநிவாஸ், புதுச்சேரி தலைமை அஞ்சல் நிலைய முதுநிலை கண்காணிப்பாளர் ஜி. சிவப்பிரகாசம், மக்கள் தொடர்பு ஆய்வாளர்  கருணாகரன், தேசிய விருது பெற்ற டெரக்கோட்டா கலைஞர் முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அஞ்சல் உறைகளை வெளியிட்டுப் பேசிய துணைநிலை ஆளுநர், “இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக நாட்டின் வரலாறு, சாதனைகள், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும்.

புவிசார் குறியீடு என்பது அந்தந்த பகுதிகளில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு குறியீடு கொடுத்து அவற்றை பிரபலப்படுத்துவது.  புவிசார் குறியீடு பெற்றுள்ள, புதுச்சேரியில் தயாரிக்கப்படும் சுடுமண் சிற்பங்கள் மற்றும் காகித கூழ் பொருட்களுக்கு சிறப்பு அஞ்சல் உறைகளை வெளியிடுவதற்காக, புதுச்சேரி தலைமை அஞ்சலகத்தைப்  பாராட்டுகிறேன். புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். அதன்மூலம் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிப்போம் என்றார்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com