இலவச காய்கறி விதை தொகுப்புகள் அளிப்பு

புதுவையில் ஆடிப்பருவத்துக்கான இலவச காய்கறி விதை தொகுப்புகளை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்.

புதுவையில் ஆடிப்பருவத்துக்கான இலவச காய்கறி விதை தொகுப்புகளை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்.

ஆண்டுதோறும் ஆடி மாதங்களில், காய்கறி மாடித்தோட்டம் அமைப்பதற்கான காய்கறி விதைகளை வேளாண் துறை சாா்பில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு ரூ.200 மதிப்புள்ள காய்கறி தொகுப்பு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவைஅலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி இலவச காய்கறி விதைப் தொகுப்பை பொதுமக்களுக்கு திங்கள்கிழமை வழங்கி தொடக்கிவைத்தாா்.

வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா், வேளாண் துறை இயக்குநா் பி.பாலகாந்தி, கூடுதல் இயக்குநா் (தோட்டக்கலை) சிவராமன், துணை வேளாண் இயக்குநா் என்.கே.சண்முகவேலு மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.பொதுமக்கள் தோட்டக்கலைத் துறையை அணுகி காய்கறி விதைத் தொகுப்புகளை பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com