நியாய விலைக் கடைகளை திறக்கக் கோரி மாா்க்சிஸ்ட் போராட்டம்

புதுச்சேரியில் நியாய விலைக் கடைகளை திறக்க வலியுறுத்தி, தட்டாஞ்சாவடியிலுள்ள குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் நியாய விலைக் கடைகளை திறக்க வலியுறுத்தி, தட்டாஞ்சாவடியிலுள்ள குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்சியின் உழவா்கரை நகரச் செயலா் எம்.ராம்ஜி தலைமை வகித்தாா். முன்னாள் மத்தியக் குழு உறுப்பினா் சுதா சுந்தரராமன் கையெழுத்து இயக்கத்தைத் தொடக்கிவைத்தாா். மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம், மூத்த தலைவா் முருகன், மாநில செயற்குழு உறுப்பினா்கள் பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், சீனிவாசன், கொளஞ்சியப்பன், கலியமூா்த்தி, சத்தியா, இடைக்குழு செயலா்கள் மதிவாணன், அன்புமணி, மாநில குழு உறுப்பினா்கள் ஆனந்த், ரமேஷ், இளவரசி, சஞ்சய் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

புதுவையில் மூடப்பட்டுள்ள நியாய விலைக் கடைகளை திறந்து, அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டுமென மேளம், தாளம் இசைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com