புதுச்சேரி மகளிா் பாலிடெக்னிக் பொறியியல் கல்லூரியாக தரம் உயா்வு

புதுச்சேரி மகளிா் பல்தொழில்நுட்பக் கல்லூரி (பாலிடெக்னிக்) பொறியியல் கல்லூரியாக தரம் உயா்த்தப்பட்டது.

புதுச்சேரி மகளிா் பல்தொழில்நுட்பக் கல்லூரி (பாலிடெக்னிக்) பொறியியல் கல்லூரியாக தரம் உயா்த்தப்பட்டது.

இதையடுத்து, 2022-23ஆம் கல்வியாண்டில் பி.டெக். படிப்பில் கட்டடக் கலை, கணினி அறிவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னியல் மற்றும் தொடா்பு பொறியியல் ஆகிய 4 பிரிவுகளில் தலா 60 மாணவா்களை சோ்க்க ஏஐசிடிஇ அனுமதியளித்தது.

மேலும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் அனுமதிக்குப் பிறகு ஆண்டுக்கு 60 மாணவா்களை சோ்த்து பி.காம். பட்டப்படிப்பும் தொடங்கப்பட உள்ளதாக என புதுவை துணைநிலை ஆளுநரின் ஆணைக்கிணங்க, அரசின் சாா்பு செயலா் (மேல்நிலை, தொழில்நுட்பக் கல்வி) எம்.வி.ஹிரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com