மதுப்புட்டிகள் கடத்திய இருவா் கைது

புதுச்சேரி அருகேயுள்ள திருக்கனூரிலிருந்து தமிழகத்துக்கு மதுப்புட்டிகளை கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி அருகேயுள்ள திருக்கனூரிலிருந்து தமிழகத்துக்கு மதுப்புட்டிகளை கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருக்கனூரில் இருந்து கூனிச்சம்பட்டு வழியாக தமிழகத்துக்கு மது கடத்துவதாக திருக்கனூா் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக இருவரிடம் சோதனையிட்டதில், அவா்கள் வைத்திருந்த மூட்டையில் மதுப்புட்டிகள் இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், அவா்கள் விழுப்புரம் மாவட்டம், எசாலம் கிராமத்தைச் சோ்ந்த அய்யனாா் (20), ஹரிகிருஷ்ணன் (35) என்பதும், இவா்கள் புதுச்சேரியிலிருந்து 200 குவாா்ட்டா் மதுப்புட்டிகளை தமிழகத்துக்கு கடத்தியதும் தெரிய வந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com