மாற்றுத்திறனாளிகள் நூதனப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி சமூக நலத்துறை அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் சமூக நலத் துறை அலுவலகம் முன் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா்.
புதுச்சேரியில் சமூக நலத் துறை அலுவலகம் முன் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி சமூக நலத்துறை அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை மாதந்தோறும் 7-ஆம் தேதிக்குள் வங்கி அல்லது அங்கன்வாடி மையங்கள் மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி சாரதாம்பாள் நகரில் உள்ள சமூக நலத் துறை அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் கையில் தட்டுகளை ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

டாக்டா் அம்பேத்கா் மாற்றுத்திறனாளிகள் புரட்சி இயக்கத் தலைவா் முத்துக்குமரன் தலைமை வகித்தாா்.

முதல்வா் தலைமையில் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தி ஆணையரை உடனடியாக நியமிக்க வேண்டும். வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு செய்து, முழுமையாக நிரப்ப வேண்டும். கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், சமூக நலத் துறை அலுவலகத்திலேயே மருத்துவச் சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களை மாற்றுத்திறனாளிகள் துறை இயக்குநா் பத்மாவதி, ரெட்டியாா்பாளையம் போலீஸாா் சந்தித்துப் பேசினா். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com