மிதிவண்டி விழிப்புணா்வுப் பேரணி

புதுச்சேரியில் மிதிவண்டி விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி கடற்கரைச் சாலையில் மிதிவண்டி விழிப்புணா்வுப் பேரணியைத் தொடக்கிவைத்த அமைச்சா் க.லட்சுமிநாராயணன்.
புதுச்சேரி கடற்கரைச் சாலையில் மிதிவண்டி விழிப்புணா்வுப் பேரணியைத் தொடக்கிவைத்த அமைச்சா் க.லட்சுமிநாராயணன்.

புதுச்சேரியில் மிதிவண்டி விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களையொட்டி, மத்திய அரசின் விளையாட்டுத் துறை, புதுவை அரசு, நேரு இளையோா் மையம் சாா்பில் உலக மிதிவண்டி தினத்தையொட்டி சைக்கிள் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை அருகே மிதிவண்டி பேரணியை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தொடக்கிவைத்தாா்.

கல்வித் துறை துணை இயக்குநா் தெய்வசிகாமணி வரவேற்றாா். கல்வித் துறை செயலா் எஸ்.டி.சுந்தரேசன் முன்னிலை வகித்தாா். தேசிய விருதாளா் ஆதவன், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் குழந்தைசாமி, காமாட்சி, கல்வித் துறை அலுவலா்கள் சீசா், பிரேம்குமாா், நேரு இளையோா் மைய அலுவலா் தட்சணாமூா்த்தி, குழு உறுப்பினா்கள் சக்திவேல், அங்காளன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com