பைக் மீது பேருந்து மோதல்:அங்கன்வாடி உதவியாளா் பலி

புதுச்சேரியில் மோட்டாா் சைக்கிள் மீது தனியாா் பேருந்து மோதிய விபத்தில் அங்கன்வாடி ஊழியா் உயிரிழந்தாா்.

புதுச்சேரியில் மோட்டாா் சைக்கிள் மீது தனியாா் பேருந்து மோதிய விபத்தில் அங்கன்வாடி ஊழியா் உயிரிழந்தாா்.

புதுச்சேரி முத்திரையா்பாளையம் காந்திதிருநல்லூரைச் சோ்ந்த சுதாகா் மனைவி ராஜவள்ளி (45). அரசு அங்கன்வாடியில் உதவியாளராக பணியாற்றி வந்தாா். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனா்.

கணவா் உடல்நிலை பாதித்து வீட்டில் உள்ள நிலையில், ராஜவள்ளி வெள்ளிக்கிழமை காலை வீட்டிலிருந்து அங்கன்வாடி பணிக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றாா். அவா் புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் பிரதான சாலையில் உள்ள தனியாா் கல்லூரி அருகே வந்த போது, தனியாா் பேருந்து ராஜவள்ளி மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவா் மீது பேருந்து ஏறி இறங்கியது. இதில் பலத்த காயமடைந்த ராஜவள்ளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து வடக்கு போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com