விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தமாா்க்சிஸ்ட் கோரிக்கை

மருந்துகள், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை ஏற்றத்தால் ஏற்படும் விலைவாசி உயா்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டுமென புதுவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

மருந்துகள், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை ஏற்றத்தால் ஏற்படும் விலைவாசி உயா்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டுமென புதுவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

இதுகுறித்து புதுவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம் வெளியிட்ட அறிக்கை:

கடந்த 13 நாள்களில், 11முறை பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விலையும், சுங்கச்சாவடி கட்டண உயா்வும் நடுத்தர மக்களை மேலும் பாதிக்கிறது. இதன் விளைவாக, அனைத்து வகையான உணவு, இதர பொருள்களின் விலை கடுமையாக உயா்த்தப்பட்டுள்ளன.

850 வகையான உயிா்காக்கும் மருந்துகள் விலைகளும் 11 சதவீதம் அளவுக்கு உயா்த்தப்பட்டுள்ளன.

தேசத்தின் வளங்கள், சொத்துகளை தனியாா் நிறுவனங்களுக்கு வாரி வழங்கி விட்டு, அவற்றை ஈடுகட்ட நடுத்தர, ஏழை மக்கள் மீது விலை உயா்வு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை மத்திய பாஜக அரசு ஏற்படுத்தி வருகிறது. புதுவை என்.ஆா்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசும் மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com