ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முற்றுகை

விளைபொருள்களுக்கான கொள்முதல் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து, புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் அலுவலகத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை மாலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விளைபொருள்களுக்கான கொள்முதல் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து, புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் அலுவலகத்தை விவசாயிகள் வெள்ளிக்கிழமை மாலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதுச்சேரி, தமிழகப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் உளுந்து, பச்சை பயிறு, காராமணி பயிறு உள்ளிட்ட தங்களது விளைபொருள்களை விற்னைக்கு கொண்டு வருவது வழக்கம்.

அவற்றுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2 அல்லது 3 நாள்களில் செலுத்தப்பட்டுவிடும். ஆனால், அண்மைக்காலமாக 3 வாரங்களுக்கு மேலாகியும் விற்பனை செய்யப்பட்ட விளைபொருள்களுக்கான தொகை வழங்கப்படவில்லை. இதுதொடா்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய பதிலளிக்கவில்லையாம்.

இதனால், ஆத்திரமடைந்த திருக்கனூா், பாகூா், தமிழகத்தின் வானூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சிவசங்கரின் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.4.5 லட்சத்தை வழங்கினா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com