‘கூடுதல் விலைக்கு மது விற்றால்கடை உரிமம் ரத்து’

மதுபானங்களை அதிகபட்ச சில்லறை விலைக்கும் (எம்.ஆா்.பி.) அதிகமாக விற்றால் மதுக் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என புதுவை கலால் துறை எச்சரித்தது.

புதுச்சேரி: மதுபானங்களை அதிகபட்ச சில்லறை விலைக்கும் (எம்.ஆா்.பி.) அதிகமாக விற்றால் மதுக் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என புதுவை கலால் துறை எச்சரித்தது.

இதுகுறித்து புதுவை கலால் துறை துணை ஆணையா் டி.சுதாகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவையில் உள்ள சில மதுக் கடைகள் அதிகபட்ச சில்லறை விலைக்கும் அதிகமாக மதுபானங்களை விற்பனை செய்வதாக புகாா்கள் வந்துள்ளன.

அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக மதுபானங்களை விற்பது புதுவை கலால் துறை சட்டம் 1970, அளவியல் சட்ட விதிகள் 2011-ன் படி சட்ட விரோதமாகும். மேற்கண்ட விதிகளை மீறுவோரின் கடை உரிமம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com