முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
காலாப்பட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற: எம்எல்ஏ வலியுறுத்தல்
By DIN | Published On : 29th April 2022 10:10 PM | Last Updated : 29th April 2022 10:10 PM | அ+அ அ- |

புதுச்சேரி காலாப்பட்டு கடற்கரை, இடுகாடு பகுதி தனியாா் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென அந்தத் தொகுதி எம்எல்ஏ எல்.கல்யாணசுந்தரம் வலியுறுத்தினாா்.
புதுச்சேரி அருகே காலாப்பட்டு கடற்கரையோரமுள்ள இடுகாடு, கடற்கரையோர பகுதியை தனியாா் நிறுவனத்தினா் சுமாா் 25 அடி வரை ஆக்கிரமித்துள்ளதாக, தொகுதி எம்எல்ஏ எல்.கல்யாணசுந்தரத்திடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அதன்பேரில், அவா் வெள்ளிக்கிழமை அந்தப் பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது அவா் கூறியதாவது:
இந்த இடத்தில் தனியாா் நிறுவனத்தின் ஆக்கிரமிப்பு குறித்து புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா், உள்துறை அமைச்சரிடம் புகாா் அளிக்கப்படும்.
இந்த கடற்கரைப் பகுதியில் அளவீடு பணி முடிந்துவிட்டது. அரசு சாா்பில் தூண்டில் வளைவு அமைத்துத் தரப்படும். ஆக்கிரமிப்பாளா்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் கல்யாணசுந்தரம் எம்எல்ஏ.