முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
புதுச்சேரி மணவெளியில் சாலைப் பணி தொடக்கம்
By DIN | Published On : 29th April 2022 10:11 PM | Last Updated : 29th April 2022 10:11 PM | அ+அ அ- |

புதுச்சேரி மணவெளி பகுதியில் சாலைப் பணியை சட்டப் பேரவைத் தலைவா், அமைச்சா்கள் வெள்ளிக்கிழமைத் தொடக்கிவைத்தனா்.
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை, மணவெளி முதல் ஆண்டியாா்பாளையம் பகுதி வரை 2 கிலோ மீட்டா் தொலைவில் சேதமடைந்து கிடக்கும் தாா்ச்சாலை புதுப்பிக்கும் திட்டம் ரூ.97.48 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.
மணவெளி அருகே கிழக்கு கடற்கரை சாலை கொருக்கமேடு சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலைப் பணிக்கான பூமி பூஜையில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், லட்சுமிகாந்தன் எம்எல்ஏ ஆகியோா் சாலைப் பணியைத் தொடக்கிவைத்தனா்.