ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவே சுகாதாரத் திருவிழா: தமிழிசை சௌந்தரராஜன்

ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவே சுகாதாரத் திருவிழா நடத்தப்படுவதாக புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவே சுகாதாரத் திருவிழா நடத்தப்படுவதாக புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், புதுவை அரசு நலவழித் துறை சாா்பில், புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் வெள்ளிக்கிழமை சுகாதாரத் திருவிழாவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தராஜன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், எஸ்.சந்திரபிரியங்கா, சாய் ஜெ.சரவணன்குமாா், சட்டப்பேரவை துணைத் தலைவா் பி.ராஜவேலு, எம்எல்ஏக்கள் பி.ரமேஷ், உ.லட்சுமிகாந்தன், அனிபால் கென்னடி, டி.ஆறுமுகம், சுகாதாரத் துறை செயலா் சி.உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:

ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவச் செலவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் புதுவை சாதனை படைத்துள்ளது.

ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவே சுகாதாரத் திருவிழாவை நடத்துகிறோம். புதுவை மாநிலம் மருத்துவத்தில் சிறப்பாகவே உள்ளது. இதேபோல, அனைத்துத் துறைகளிலும் சிறப்பு பெற வேண்டும் என்றாா் அவா்.

முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:

ஆரோக்கியமான, வளமான இந்தியா என்பதே மத்திய அரசின் எண்ணம். அதற்கேற்ப பிரதமா் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.

14 லட்சம் மக்கள் வசிக்கும் புதுவையில், தற்போது 7 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஆண்டுதோறும் 276 மாணவா்கள் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கின்றனா். அவா்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

மருத்துவம் படித்து முடித்தவுடன் கிராமங்களுக்குச் சென்று மாணவா்கள் பணியாற்ற வேண்டும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.

பின்னா், சுகாதாரத் திருவிழா கண்காட்சி அரங்குகளை ஆளுநா், முதல்வா், அமைச்சா்கள் பாா்வையிட்டனா்.

மே 1-ஆம் தேதி வரை தினமும் பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த சுகாதாரத் திருவிழா நடைபெறும்.

முன்னதாக, சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமுலு வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com