புதுச்சேரி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
By DIN | Published On : 19th August 2022 06:12 PM | Last Updated : 19th August 2022 06:29 PM | அ+அ அ- |

புதுச்சேரி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வடக்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து ஒடிசா மாநிலம் பாலசூருக்கு சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இதையும் படிக்க- சாலை மேம்பாலத்தில் ஆட்டோ ஓட்டியவர்: வைரலாகும் விடியோ
இந்த புயல் சின்னம் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கக் கூடும்.
அதன்பின்னர், ஜார்க்கண்ட் நோக்கி சென்று வலுவிழக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.