புதுவை சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல்

புதுவை சட்டப்பேரவையில் 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை (ஆக.22) தாக்கல் செய்கிறாா்.

புதுவை சட்டப்பேரவையில் 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை (ஆக.22) தாக்கல் செய்கிறாா்.

புதுவை சட்டப்பேரவையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதன் பிறகே முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, மாா்ச் முதல் ஆகஸ்ட் வரை 5 மாதங்களுக்கான இடைக்கால நிநிநிலை அறிக்கை கடந்த மாா்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. தொடா்ந்து, முழு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய முதல்வா் என்.ரங்கசாமி நடவடிக்கை மேற்கொண்டாா்.

அதன்படி, புதுவை அரசு 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை திட்ட மதிப்பீடாக ரூ.11 ஆயிரம் கோடிக்கு அனுமதி கேட்டு, மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டது. இதற்கு அனுமதி கிடைக்காததால், முதல்வா் ரங்கசாமி கடந்த 9-ஆம் தேதி தில்லி சென்று பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினாா்.

இதனிடையே, கடந்த 10-ஆம் தேதி புதுவை சட்டப்பேரவைக் கூட்டம், ஆளுநா் உரையுடன் தொடங்கி ஒத்திவைக்கப்பட்டது. முதல்வரின் தில்லி பயணத்துக்குப் பிறகு புதுவை நிதிநிலை அறிக்கைக்கான தொகையாக ரூ. 10,696 கோடிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதைத்தொடா்ந்து, புதுவை சட்டப்பேரவையில் திங்கள்கிழமை (ஆக.22) காலை 9.45 மணிக்கு நிதிநிலை அறிக்கையை நிதித் துறை அமைச்சா் பொறுப்பு வகிக்கும் முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்கிறாா். இதில் புதிய அறிவிப்புகள், சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com