புதுவை நிதிநிலை அறிக்கை: தலைவா்கள் கருத்து

புதுவை நிநிநிலை அறிக்கை குறித்து பாஜக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா்கள் கருத்து தெரிவித்தனா்.

புதுவை நிநிநிலை அறிக்கை குறித்து பாஜக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா்கள் கருத்து தெரிவித்தனா்.

பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன்: ஏழை, எளிய மக்களுக்கு மிகவும் பயனளிக்கக்கூடிய வகையிலும், வேலைவாய்ப்பு வழங்கக் கூடிய முறையில் நிதிநிலை அறிக்கையை முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்துள்ளாா். தேசிய சட்டப் பல்கலைக்கழகம், புதுச்சேரி கடற்கரையில் மிதக்கும் படகுத் துறை அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன்: உள்கட்டமைப்பு வசதிகள், சுற்றுலாவை மேம்படுத்தல், பெண்கள், குழந்தைகளுக்கு பல்வேறு திட்டங்கள், மீனவா் நலன், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிற்கான கூடுதல் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் பாராட்டுக்குரியது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம்: புதிய வளா்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லாத நிதிநிலை அறிக்கையாகவும், ஏற்கெனவே அறிவித்த திட்டங்களையே மீண்டும் அறிவித்து ஏமாற்றப்பட்டுள்ளது.

உள் கட்டமைப்புப் பணிகளுக்கு நிதி உத்தரவாதம் இல்லை. பொதுத் துறை நிறுவனங்களுக்கான ஊதிய நிலுவை, பஞ்சாலைகள் திறப்பு பற்றி எதுவும் சொல்லப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com