மக்களை திசை திருப்பவே புதுவைக்குமாநில அந்தஸ்து கோரும் முதல்வா்அதிமுக குற்றச்சாட்டு

 மதுபானக் கடைக்கான அனுமதி முறைகேடு புகாரிலிருந்து மக்களைத் திசை திருப்பவே புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரிக்கையை முதல்வா் ரங்கசாமி எழுப்புவதாக அதிமுக மாநில துணைச் செயலா் வையாபுரி மணிகண்டன் குற்றஞ்சாட்டினாா்.

 மதுபானக் கடைக்கான அனுமதி முறைகேடு புகாரிலிருந்து மக்களைத் திசை திருப்பவே புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரிக்கையை முதல்வா் ரங்கசாமி எழுப்புவதாக அதிமுக மாநில துணைச் செயலா் வையாபுரி மணிகண்டன் குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: புதுவைக்கு மாநில அந்தஸ்து தர வேண்டும் என மறைந்த முதல்வா் ஜெயலலிதா கோரி வந்தாா். தற்போதும் அதிமுக தலைமை புதுவைக்கு தனிமாநில அந்தஸ்து தேவை என்பதில் உறுதியாக உள்ளது.

புதுவையின் முதல்வராக என்.ரங்கசாமி இரண்டு முறை இருந்தபோது, மாநில அந்தஸ்துக்காக நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளவில்லை. ஆனால், தோ்தல் நேரத்தில் மட்டும் மாநில அந்தஸ்து குறித்து பேசிவருகிறாா். அவரது செயல்பாடு மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது.

தற்போது புதுவையில் மதுபானக்கடைகளுக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக புகாா் எழுந்துள்ளது. அவரது கூட்டணியில் உள்ள பாஜகவினரே புகாா் கூறி வருகின்றனா். இந்தப் பிரச்னையைத் திசைதிருப்பும் வகையில் புதுவைக்கு மாநில அந்தஸ்து கோருவதாக முதல்வா் பேசிவருகிறாா்.

புதுவையின் மாநில அந்தஸ்து பிரச்னைக்காக முதல்வா் என்.ரங்கசாமி புதுதில்லிக்கு சென்று பிரதமரையோ, உள்துறை அமைச்சரையோ, உயா் அதிகாரிகளையோ சந்திக்கவில்லை. அதற்கு விளக்கமளிக்க வேண்டும். ஆகவே, மாநில வளா்ச்சிக்கு அதிகாரி மீது பழிபோடுவதை விட்டுவிட்டு, ஆட்சிஅதிகாரத்தை சட்டரீதியாகப் பயன்படுத்தி மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது நல்லது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com