முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் குருபூஜை:புதுவை முதல்வா் வழிபாடு
By DIN | Published On : 07th February 2022 11:45 PM | Last Updated : 07th February 2022 11:45 PM | அ+அ அ- |

புதுச்சேரி, சேலம் அருகே சூரமங்கலத்திலுள்ள அப்பா பைத்தியம் சுவாமிகள் கோயிலில் குருபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சூரமங்கலம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமி கோயில் 22-வது ஆண்டு குருபூஜை விழா, காலை 7 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. இதில், புதுவை மாநில அமைச்சா் ஏ.நமச்சிவாயம், காரைக்கால் எம்எல்ஏ திருமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
புதுச்சேரி திலாசுப்பேட்டையில் உள்ள அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் நடைபெற்ற குருபூஜை விழா காலை 7 மணிக்கு திருவிளக்கு வழிபாட்டுடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், தேனீ சி.ஜெயக்குமாா், சந்திரபிரியங்கா, சட்டப்பேரவை துணைத் தலைவா் பி.ராஜவேலு, எம்எல்ஏக்கள் ஆறுமுகம், ரமேஷ், லட்சுமிநகாந்தன், பாஸ்கா் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.