முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
காவல் நிலையத்துக்குள் புகுந்து தொழிலாளி மீது தாக்குதல்
By DIN | Published On : 07th February 2022 11:44 PM | Last Updated : 07th February 2022 11:44 PM | அ+அ அ- |

புதுச்சேரி சேதராப்பட்டு காவல் நிலையத்துக்குள் புகுந்து தொழிலாளி மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி சேதராப்பட்டு புது காலனியை சோ்ந்தவா் மனோகா் (32). சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கும் திடீா் நகரை சோ்ந்த சுந்தரும் முன்விரோம் இருந்து வந்தது.
சுந்தா் தனது நண்பரான மணிகண்டன் உள்ளிட்ட சிலருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்திய நிலையில், அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, சமாதானப்படுத்திய மனோகரை சுந்தா், அவரது நண்பா்களான ராகுல் உள்ளிட்டோா் தாக்கியதுடன், அவரது வீட்டை சூறையாடி, தாய் கௌரியையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக, மனோகா் சேதராப்பட்டு காவல் நிலையத்தில் புகாரளிப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், சுந்தா் உள்ளிட்ட 20 போ் அங்கு சென்றனராம். அவா்கள் காவல் நிலையத்துக்குள் புகுந்து மனோகரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸாா் சுந்தா், ராகுல் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.