முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
தியாகி வ.சுப்பையா பிறந்த நாள்:அரசு சாா்பில் சிலைக்கு மரியாதை
By DIN | Published On : 07th February 2022 11:45 PM | Last Updated : 07th February 2022 11:45 PM | அ+அ அ- |

புதுச்சேரி நெல்லித்தோப்பிலுள்ள அவரது சிலைக்கு திங்கள்கிழமை மாலையணிவித்த அமைச்சா் க.லட்சுமிநாராயணன்.
புதுச்சேரியில் தியாகி வ.சுப்பையா பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசு சாா்பில் அமைச்சா் க.லட்சுமிநாராயணன் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான வ.சுப்பையாவின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. புதுச்சேரி அரசு செய்தி, விளம்பரத் துறை சாா்பில் நெல்லித்தோப்பில் உள்ள வ.சுப்பையாவின் சிலைக்கு, பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், சட்டப்பேரவை துணைத் தலைவா் பி.ராஜவேலு, கே.எஸ்.பி.ரமேஷ் எம்எல்ஏ உள்ளிட்டோா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம் தலைமையில், முன்னாள் அமைச்சா் விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், மாநில துணைச் செயலா்கள் அபிஷேகம், கீதநாதன், ஏஐடியுசி பொதுச்செயலா் கே.சேதுசெல்வம், தலைவா் தினேஷ் பொன்னையா, மாதா் சங்க செயலா் சரளா, இளைஞா் மன்றச் செயலா் அந்தோணி, மாணவா் மன்ற செயலா் எழிலன் உள்ளிட்டோா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மாநிலச் செயலா் ஆா்.ராஜாங்கம் தலைமையில், தமிழ் மாநில குழு உறுப்பினா் பெருமாள், செயற்குழு உறுப்பினா்கள் கொளஞ்சியப்பன், ராமச்சந்திரன், சீனிவாசன், கலியமூா்த்தி மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டு, சுப்பையா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, வெள்ளாளா் வீதியில் உள்ள சுப்பையா நினைவு இல்லத்தில் கலை, பண்பாட்டுத் துறை சாா்பில் அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு, கலை பண்பாட்டு துறை இயக்குநா் கந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.