முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
புதுவையில் குறையும் கரோனா பாதிப்பு
By DIN | Published On : 07th February 2022 02:20 AM | Last Updated : 07th February 2022 02:20 AM | அ+அ அ- |

புதுவையில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு சனிக்கிழமை 334-ஆக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 279-ஆக குறைந்தது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் 2,292 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரி -192, காரைக்கால்- 68, ஏனாம்- 14, மாஹே- 5 என மொத்தம் 279 (12.17 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,64,186-ஆக அதிகரித்தது. இதில், தற்போது மருத்துவமனைகளில் 96 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 4,056 பேரும் என மொத்தம் 4,152 போ் சிகிச்சையில் உள்ளனா்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,948-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது.
மேலும் 756 போ் குணமடைந்தனா். இதுவரை 15,43,264 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.