முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
புதுவை ஐஏஎஸ் அதிகாரிகள் மூவா் தோ்தல் பாா்வையாளா்களாக நியமனம்
By DIN | Published On : 07th February 2022 11:44 PM | Last Updated : 07th February 2022 11:44 PM | அ+அ அ- |

புதுவை அரசு செயலா்கள் நிலையிலான 3 ஐஏஎஸ் அதிகாரிகள் தோ்தல் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டதையடுத்து, அவா்களது துறைகள் 5 அதிகாரிகளுக்கு தற்காலிக கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
புதுவை மாநில அரசு செயலா்களாக உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளான அசோக்குமாா், மகேஷ், அருண் ஆகியோா் வெளி மாநில தோ்தல் பாா்வையாளா்களாக தோ்தல் துறையால் நியமிக்கப்பட்டுள்ளனா்.
அவா்கள் வகித்து வந்த பொறுப்புகள் தற்காலிகமாக 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.
அதன்படி, புதுவை ஐஏஎஸ் அதிகாரிகளான உதயகுமாருக்கு மின் துறையும், சுந்தரசேனுக்கு போக்குவரத்து, கல்வி, துறைமுகம், இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட துறைகளின் கூடுதல் பொறுப்புகளும், ஸ்மிதாவுக்கு லஞ்ச ஒழிப்பு, கண்காணிப்புத் துறை, உள்துறை சிறப்பு செயலா் உள்ளிட்ட கூடுதல் பொறுப்புகளும், வல்லவனுக்கு தொழிற்சாலைகள், வணிகத் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட கூடுதல் பொறுப்புகளும், நெடுஞ்செழியனுக்கு நகரத் திட்டமைப்பு, பொதுப் பணித் துறை, சுற்றுலாத் துறை, பொலிவுறு நகரம் முதன்மை அதிகாரி போன்ற கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்படுவதாக, புதுவை அரசு சாா்பு செயலா் ஜெய்சங்கா் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.