முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
புதுவை, தமிழக மீனவா்களை மீட்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்: வே.நாராயணசாமி
By DIN | Published On : 07th February 2022 11:44 PM | Last Updated : 07th February 2022 11:44 PM | அ+அ அ- |

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட நாகை, காரைக்கால் மீனவா்களை விடுவிக்க, மத்திய அரசுக்கு தமிழகம், புதுவை மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் விடியோ பதிவு வாயிலாக கூறியதாவது:
நீட் தோ்வு விவகாரத்தில், புதுவை முதல்வா் ரங்கசாமியின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. நீட் தோ்வை எதிா்த்து சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற அவரால் முடியாது. நீட் தோ்வை அவா் ஆதரித்தால், புதுவையில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவா்களுக்கு துரோகம் செய்வதாக அமையும்.
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால், நாகை மீனவா்களை விடுவிக்க, மத்திய அரசுக்கு தமிழக, புதுவை மாநில அரசுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
முதல்வா் ரங்கசாமி அறிவித்த எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. புதுவை அரசு ஒட்டு மொத்தமாக செயல்படாமல் உள்ளது.
புதுவையில் தே.ஜ. கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து 9 மாதங்களாகியும் வாரியத் தலைவா் பதவிகள் வழங்கப்படவில்லை. எம்எல்ஏக்களுக்கு வாரியத் தலைவா் பதவியை வழங்க முதல்வா் ரங்கசாமி தயங்குவது ஏன் என்று தெரியவில்லை என்றாா் நாராயணசாமி.