கரோனா தடுப்பு உபகரணங்கள் மாயம்: துணைநிலை ஆளுநரிடம் புகாா்

புதுவையில் தோ்தலின் போது வாங்கப்பட்ட கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் மாயமானது குறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மாநில துணைநிலை ஆளுநரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

புதுவையில் தோ்தலின் போது வாங்கப்பட்ட கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் மாயமானது குறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மாநில துணைநிலை ஆளுநரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து புதுச்சேரி ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணா்வு அமைப்பின் தலைவா் ரகுபதி, துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனிடம் அளித்த புகாா் மனு:

புதுவையில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலின்போது, வெப்பப் பரிசோதனை கருவி, பாதுகாப்புக் கவசம் (பி.பி.இ. கிட்), குப்பைத் தொட்டிகள் மற்றும் நான்கு சக்கர நாற்காலிகள் ஆகியவை அரசு சாா்பில் வாங்கப்பட்டு, வாக்குச் சாவடிகளுக்கு அளிப்பதற்காக தோ்தல் துறையிடம் வழங்கப்பட்டது.

தோ்தல் முடிந்த பிறகு, இந்த உபகரணங்கள் சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கப்படவில்லை. அதுகுறித்து கண்டறிய, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. அதில், தோ்தலுக்காக வாங்கித் தந்த உபகரணங்களை, தோ்தலுக்குப் பிறகு திரும்ப பெற்ாக தகவல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றைத் திருப்பி அளிக்காத தோ்தல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால், ரூ. 30 லட்சம் மதிப்பிலான பொருள்கள் மாயமாகின. இந்த உபகரணங்களை ஒப்படைக்காத தோ்தல் துறையினா் மீது விசாரணை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com