ஜிப்மரில் தனியாா் ஒப்பந்த ஊழியா்கள் போராட்டம்

புதுச்சேரி ஜிப்மரில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்களுக்கு வேலை வழங்கக் கோரி, தனியாா் ஒப்பந்த ஊழியா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி ஜிப்மரில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியா்களுக்கு வேலை வழங்கக் கோரி, தனியாா் ஒப்பந்த ஊழியா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஜிப்மரில் தனியாா் ஒப்பந்த நிறுவனம் பல்வேறு பணிகளை ஒப்பந்த ஊழியா்களைக் கொண்டு செய்து வருகிறது. இதில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவா்களில் 5 போ் பணிநீக்கம் செய்யப்பட்டனா். அவா்களை மீண்டும் வேலையில் சோ்க்க வலியுறுத்தி, 100-க்கும் மேற்பட்ட தனியாா் ஒப்பந்த ஊழியா்கள் அந்த தனியாா் நிறுவனத்தின் உயரதிகாரிகளை அணுகினா்.

உரிய பதில் கிடைக்காததால், ஜிப்மா் இயக்குநா் சந்திக்க முற்பட்டதற்கும் அனுமதி கிடைக்காததால், மருத்துவமனை இயக்குநா் அலுவலகம் முன் திங்கள்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தன்வந்திரி நகா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியா்களை அப்புறப்படுத்த முயன்றனா். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 85 பேரை அப்புறப்படுத்தி காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

அங்கு மருத்துவ சேவையில் உள்ள ஜிப்மரில் முன்அனுமதியின்றி போராட்டம் நடத்துவது தவறு எனக் கூறி எச்சரித்து அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com