ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சைப் பிரிவுகள் மீண்டும் செயல்பட தொடங்கின

புதுச்சேரி ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சைப் பிரிவுகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கின.

புதுச்சேரி ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சைப் பிரிவுகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் செயல்படத் தொடங்கின.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் கரோனா பரவல் காரணமாக வெளிப்புற சிகிச்சைப் பிரிவுகள் நேரடியாக செயல்படவில்லை. தொலைபேசியில் முன்பதிவு செய்த 50 பேருக்கு மட்டுமே ஒவ்வொரு துறையிலும் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

தற்போது கரோனா தாக்கம் குறைந்து வருவதால், திங்கள்கிழமை முதல் ஜிப்மரில் மீண்டும் பழைய முறைப்படி அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, திங்கள்கிழமை காலை ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சை பிரிவுகள் வழக்கம்போல செயல்படத் தொடங்கின. புதுச்சேரி மட்டுமன்றி தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சோ்ந்த நோயாளிகளும் வெளிப்புற சிகிச்சைக்காக வந்திருந்தனா்.

இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியவா்களும், முகக்கவசம் அணிந்த நோயாளிகள் மட்டுமே பரிசோதனைக்குப் பிறகு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com