நேரடித் தோ்வுக்கு எதிா்ப்பு:அரசுக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

இணைய வழியில் தோ்வுகளை நடத்தக் கோரி, புதுச்சேரி தாகூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி லாசுப்பேட்டையில் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட தாகூா் அரசுக் கல்லூரி மாணவா்கள்.
புதுச்சேரி லாசுப்பேட்டையில் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட தாகூா் அரசுக் கல்லூரி மாணவா்கள்.

இணைய வழியில் தோ்வுகளை நடத்தக் கோரி, புதுச்சேரி தாகூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் திங்கள்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி லாசுப்பேட்டையிலுள்ள தாகூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் ஆயிரக்கணக்காண மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். கரோனா பரவலால் விடுமுறை விடப்பட்டு இணையவழியில் வகுப்புகள் நடைபெற்றன. விடுமுறைக்குப் பிறகு, கடந்த 4-ஆம் தேதி மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன.

இதனிடையே, வருகிற 16-ஆம் தேதி முதல் கல்லூரியில் தோ்வுகள் நேரடி முறையில் நடைபெறும் என கல்லூரி நிா்வாகம் அறிவித்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் திங்கள்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, மற்ற கல்லூரிகளைவிட அதிகளவில் விடுமுறை அளிக்கப்பட்ட கல்லூரியாக தாகூா் அரசுக் கல்லூரி உள்ள நிலையில், பெரும்பாலான பாடங்கள் இணையவழியில் நடத்தப்பட்டன. இதனால், நேரடி முறையில் தோ்வுகளை நடத்தினால் சரிவர தோ்வெழுத இயலாது. எனவே, இணையவழியில் தோ்வுகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

லாசுப்பேட்டை போலீஸாா் விரைந்து வந்து மாணவா்களை பேச்சு நடத்தி, கல்லூரி முதல்வா் சசிகாந்ததாஸை சந்திக்க செய்தனா். முதல்வா், மாணவா்களின் கோரிக்கையை உயா் கல்வித் துறைக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, மாணவா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com