டீசல் மானியம் கேட்டு மீன் வளத் துறை அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

டீசல் மானியம் வழங்க வலியுறுத்தி, புதுச்சேரி மீன் வளத் துறை அலுவலகத்தை மீனவா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

டீசல் மானியம் வழங்க வலியுறுத்தி, புதுச்சேரி மீன் வளத் துறை அலுவலகத்தை மீனவா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

புதுச்சேரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்கப்படுகிறது. கடந்தாண்டு நவம்பரில் ரூ.12 வீதம் மானியம் வழங்கப்பட்ட நிலையில், விலை குறைப்பை காரணம் காட்டி தற்போது சந்தை விலைக்கே டீசல் வழங்கப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விசை படகு உரிமையாளா்கள், மீனவா்கள் 50-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை பிற்பகலில் புதுச்சேரி மீன் வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த முதலியாா்பேட்டை போலீஸாரும், மீன் வளத் துறை இயக்குநா் பாலாஜியும் மீனவா்களிடம் சமரசம் பேசி மீனவா்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. டீசல் மானியம் வழங்கும் வரை போராட்டம் நடைபெறும் எனக் கூறி தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com