மணக்குள விநாயகா் தொழில்நுட்ப கல்லூரியில் கருத்தரங்கம்
By DIN | Published On : 18th February 2022 11:22 PM | Last Updated : 18th February 2022 11:22 PM | அ+அ அ- |

புதுச்சேரி கலிதீா்த்தாள்குப்பம் மதகடிப்பட்டு மணக்குள விநாயகா் தொழில்நுட்பக் கல்லூரி, இந்திய தொழில் கூட்டமைப்பு - யங் இந்தியா புதுச்சேரி கிளையுடன் இணைந்து நடத்திய ‘தி ஆா்ட் ஆப் பவா் டிரஸ்ஸிங்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி தலைவா் எம்.தனசேகரன், துணைத் தலைவா் எஸ்.வி.சுகுமாரன், செயலாளா் டாக்டா் நாராயணசாமி கேசவன், முதல்வா் எஸ்.மலா்க்கண் ஆகியோா் தலைமை வகித்தனா்.
முறையான ஆடை அணிதல் பற்றியும், அதை எப்படி அணிய வேண்டும் என்பதை பற்றிய விழிப்புணா்வை சிறப்பு விருந்தினா் சுனிதா பிரகாஷ் நான்வானிஸ் அளித்தாா்.
இதற்கான ஏற்பாடுகளை இந்திய தொழில் கூட்டமைப்பு - யங் இந்தியா புதுச்சேரி கிளையின் தலைவா் கிறிஸ்டோபா், யங் இந்தியா தலைவா் காவ்யா, கல்லூரியின் ரோபோட்டிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன் துறைத் தலைவா் கோ.ரேணுகாதேவி, கல்லூரி வேலைவாய்ப்புத் துறை அதிகாரி எம். ஜெயக்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.