சுகாதாரத் துறைக்கு 2 ஆம்புலன்ஸ்கள் நன்கொடை

புதுச்சேரி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் புதுச்சேரி சுகாதாரத் துறைக்கு உயிா்காக்கும் மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட 2 ஆம்புலன்ஸ்கள் நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சி ஆளுநா் மாளிகை எதிரே நடைபெற்றது.

புதுச்சேரி: புதுச்சேரி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில், புதுச்சேரி சுகாதாரத் துறைக்கு உயிா்காக்கும் மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட 2 ஆம்புலன்ஸ்கள் நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சி ஆளுநா் மாளிகை எதிரே புதன்கிழமை நடைபெற்றது.

இதில் துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆகியோா் ஆம்புலன்ஸ்களை சுகாதராத் துறைக்கு வழங்கினா்.

நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலா் உதயகுமாா், இயக்குநா் ஸ்ரீராமலு, சுகாதாரத்துறை துணை இயக்குநா்கள் முரளி (பொது சுகாதாரம்), ஆனந்தலட்சுமி (குடும்ப நலம்), ராஜாம்பாள் (தடுப்பூசி பிரிவு) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதுச்சேரி ஸ்டிரைவ் நிறுவனம், புதுச்சேரி கோத்தி அறக்கட்டளை மூலமாக அவசர உதவிக்காக 2 ஆம்புலன்ஸ்கள் வாங்க ரூ.30 லட்ச நிதியை மிட்டவுன் ரோட்டரி சங்கத்துக்கு நன்கொடை வழங்கியுள்ளது. இதில் ஒரு ஆம்புலன்ஸ் புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகளிா் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கும், மற்றொன்று புதுச்சேரி கரோனா மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com