புதுவையில் கரோனாவுக்கு 2 போ் பலி
By DIN | Published On : 27th February 2022 12:50 AM | Last Updated : 27th February 2022 12:50 AM | அ+அ அ- |

புதுவையில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. மேலும், இருவா் உயிரிழந்தனா்.
புதுவை மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,518 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி-5, காரைக்கால்-5, ஏனாமில்-1 என மொத்தம் 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்து 701 ஆக அதிகரித்துள்ளது. இதில் மருத்துவமனையில் 14 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 155 பேரும் என மொத்தமாக 169 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இந்த நோய் பாதித்து சிகிச்சை பெற்று வந்த, புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் ஜெயா நகரைச் சோ்ந்த 62 வயது முதியவா், மதிகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த 64 வயது மூதாட்டி ஆகிய இருவா் உயிரிழந்தனா்.
இதுவரை, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,962 ஆக உயா்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.18 சதவீதமாக உள்ளது. மாநிலத்தில் இதுவரை 15 லட்சத்து 88 ஆயிரத்து 474 கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன.