புதுச்சேரியில் ஒமைக்ரான் சிறப்பு வார்டுகள் ஏற்பாடு: முதல்வர்  ரங்கசாமி ஆய்வு

புதுச்சேரியில் ஒமைக்ரான் சிறப்பு வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
பழைய துறைமுக வளாகத்தில் உள்ள சுற்றுலா கட்டமைப்பு வளாகத்தை ஆய்வு செய்யும் முதல்வர்  ரங்கசாமி.
பழைய துறைமுக வளாகத்தில் உள்ள சுற்றுலா கட்டமைப்பு வளாகத்தை ஆய்வு செய்யும் முதல்வர் ரங்கசாமி.

புதுச்சேரியில் ஒமைக்ரான் சிறப்பு வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதேநேரத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியாக வார்டுகளை உருவாக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

புதுவையிலும் அதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி ஏ. எப்.டி. மில் வளாகத்தை பார்வையிட்டார். அங்கு படுக்கை வசதி செய்ய முடியுமா? என ஆய்வு செய்தார். 

இந்நிலையில் திங்கள் கிழமை முதல்வர் ரங்கசாமி பழைய துறைமுக வளாகத்தில் உள்ள சுற்றுலா கட்டமைப்பு வளாகத்தை ஆய்வு செய்தார். அங்கு ஒமைக்ரானுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 400 படுக்கை வசதிகள் அமைக்க முடியுமா? என ஆய்வு செய்தார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுவையில் ஒமைக்ரான் சிகிச்சை மையங்களை அமைப்பதற்கு புதுவை அரசு சார்பில் தேவையான படுக்கைகள், மருந்துகள் தயார் படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

அதற்கான இடங்களை பார்த்து வருகிறோம். புதுச்சேரி பழைய துறைமுகம், நவீன மீன் அங்காடி மையம், லாஸ்பேட்டை சமுதாய கூடம் ஆகிய இடங்களில் படுக்கைகள் தயார் செய்ய பார்வையிட்டு உள்ளோம்.

விரைவில் சிகிச்சை மையங்கள் தயாராகும். புதுச்சேரியில் ஒமைக்கிறான் பரிசோதனை மையம் அமைப்பதற்கும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com