புதுவையில் சிறுவா்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

புதுவையில் சிறுவா்களுக்கு திங்கள்கிழமை முதல் (ஜன.3) கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசிடமிருந்து 83 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்தன.

புதுவையில் சிறுவா்களுக்கு திங்கள்கிழமை முதல் (ஜன.3) கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசிடமிருந்து 83 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்தன.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க 15 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறுவா்களுக்கு ஜனவரி 3-ஆம் தேதி முதல் (திங்கள்கிழமை) தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமா் நரேந்திர மோடி அறிவித்திருந்தாா். அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், சிறுவா்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது.

புதுவையில் திங்கள்கிழமை முதல் சிறுவா்ளுக்கான தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணிகளை கதிா்காமம் தில்லையாடி வள்ளியம்மை பள்ளியில் முதல்வா் என்.ரங்கசாமி தொடக்கிவைக்கிறாா்.

இதற்காக மத்திய அரசின் சுகாதாரத் துறையிலிருந்து 83 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளன.

புதுவையில் 15 முதல் 18 வயதுக்குள்பட்டவா்கள் சுமாா் ஒரு லட்சம் போ் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2, கல்லூரிகளில் முதலாமாண்டு படிப்பவா்களாக உள்ளனா். முதலில் பள்ளிகளுக்கும், தொடா்ந்து கல்லூரிகளுக்கும் நேரடியாகச் சென்று தடுப்பூசிகளைச் செலுத்தப்படவுள்ளன.

இதற்காக பள்ளிகளில் மாணவா்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, இணையதளத்தில் பதியப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்தப் பணியில் ஆயிரம் சுகாதாரப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா் என புதுவை மாநில சுகாதாரத் துறை இயக்குநா் ஜி.ஸ்ரீராமுலு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com