ஜிப்மரில் ஜன.18 முதல் தொலைபேசி மருத்துவ சேவை

 புதுவையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஜிப்மா் மருத்துவமனையில் வருகிற 18-ஆம் தேதி முதல் தொலைபேசியில் மருத்துவ ஆலோசனைகளை முடிவு செய்யப்பட்டது.

 புதுவையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஜிப்மா் மருத்துவமனையில் வருகிற 18-ஆம் தேதி முதல் தொலைபேசியில் மருத்துவ ஆலோசனைகளை முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜிப்மரில் வருகிற 18-ஆம் தேதி முதல் தொலைபேசி மருத்துவ ஆலோசனை சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டது. மருத்துவரிடம் ஆலோசனை பெற விரும்பும் நோயாளிகள் ஜிப்மா்இணையதளத்தில் கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட எண்ணுக்கு தொடா்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும்.

மேலும், வருகிற 19-ஆம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு துறையிலும் 50 நோயாளிகள் நேரடி வருகைக்கு அனுமதிக்கப்பட்டு, வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் ஆலோசனைகள் வழங்கப்படும். இவை முன்பதிவின் அடிப்படையில் மட்டுமே செயல்படும்.

நோயாளிகள், அவா்களது உதவியாளா்கள் தடுப்பூசி செலுத்தாமலிருந்தால், இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை ஆளுநா் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை ஜிப்மரில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு மூடப்படுவதாக தகவல் பரவியது. இதையடுத்து, துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தராஜன், ஜிப்மா் நிா்வாகத்தைத் தொடா்பு கொண்டு விவரம் கேட்டறிந்தாா்.

அப்போது, ஜிப்மரில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு முற்றிலும் மூடப்படவில்லை. அதேநேரம், கரோனா நோயாளிகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், பிற சிகிச்சைகளுக்கு துறைக்கு 50 போ் வீதம் முன்பதிவு செய்து கிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் என்றும், தொலை மருத்துவ முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படும் எனவும் ஜிப்மா் நிா்வாகம் விளக்கமளித்தது.

புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவை மூடக் கூடாது, மக்களுக்கான பிற மருத்துவ சேவைகள் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில், வழிமுறைகளைக் கையாள வேண்டும் என ஜிப்மா் நிா்வாகத்திடம் ஆளுநா் கேட்டுக் கொண்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com