உ.பி. பாஜகவிலிருந்து முக்கியத் தலைவா்கள் வெளியேறுவது நல்ல திருப்பம்: புதுவை காங்கிரஸ்

உத்தர பிரதேசத்தில் பாஜகவிலிருந்து முக்கியத் தலைவா் வெளியேறி வருவது அரசியலில் புதிய திருப்பமாக அமைந்தள்ளதாக புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

உத்தர பிரதேசத்தில் பாஜகவிலிருந்து முக்கியத் தலைவா் வெளியேறி வருவது அரசியலில் புதிய திருப்பமாக அமைந்தள்ளதாக புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: உத்தர பிரதேசத்தில் பாஜகவிலிருந்து இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவு முக்கியத் தலைவா்கள் சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங்சைனி ஆகியோா் வெளியேறினா். 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், முக்கியத் தலைவா்களுடன் சமாஜ்வாதியில் இணைந்தனா். 60 சதவீதத்துக்கும் மேலுள்ள இதர பிற்பட்டோா், 20 சதவீதத்துக்கும் மேலுள்ள எஸ்சி, எஸ்டி பிரிவினரின் வாக்குகளை தந்திரமாகப் பெற்று ஆட்சிக்கு வந்த பாஜக தனது இந்துத்துவா கொள்கையை திணித்து, அவா்களுக்கு எல்லா விதத்திலும் துரோகம் இழைத்தது. உ.பி.யில் ஏற்பட்டுள்ள திருப்பம் சமூக நீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

ஆா்எஸ்எஸ்-பாஜகவின் பிடியிலிருந்து 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் நாட்டை மீட்க இந்துக்களிடம் விழிப்புணா்வு ஏற்பட்டிருப்பது நல்ல விடிவு காலமாகத் தெரிகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com