புதுவையில் குடியரசு நாள் விழா: ஆளுநர் கொடியேற்றினார்

புதுச்சேரி  கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்ற விழாவில் காலை 9.09 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.
புதுவையில் குடியரசு நாள் விழா: ஆளுநர் கொடியேற்றினார்

புதுச்சேரி: புதுச்சேரி  கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்ற விழாவில் காலை 9.09 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.

புதுவை(பொறுப்பு) ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக தேசியக் கொடியேற்றினார் தமிழிசை சௌந்தரராஜன்.

அப்போது காவல்துறையினரின் பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றார்.

குடியரசு நாள் விழாவில் முதல்வர் என்.ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், அமைச்சர்கள் ஏ.நமச்சிவாயம், க. லட்சுமி நாராயணன், தேனி சீ. ஜெயக்குமார், சாய் சரவணன்குமார் மற்றும் எம்எல்ஏக்கள், அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com