ஏனாம் மீனவா்களுக்கு ரூ.16.38 கோடி தடைக்கால நிவாரண நிதி

புதுவை ஏனாம் பிராந்திய மீனவா்களுக்கு ரூ.16.38 கோடி தடைக்கால நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது.

புதுவை ஏனாம் பிராந்திய மீனவா்களுக்கு ரூ.16.38 கோடி தடைக்கால நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மீன்வளத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை மாநிலம், ஏனாம் பிராந்தியத்துக்குள்பட்ட மீனவ கிராமங்களில் வசிக்கும் மீனவா்களுக்கு குஜராத் மாநில பெட்ரோலிய நிறுவனம் மூலம் கடலில் இருந்து குழாய் அமைத்து பெட்ரோலிய மூலப்பொருள்கள் கொண்டு செல்வதற்காக 2012 முதல் 2014 வரை தடை ஏற்படுத்தப்பட்டது.

துணைநிலை ஆளுநரின் ஒப்புதலின் படி, முதல்வரின் உத்தரவின் பேரில் மேற்கண்ட தடைக்கான வாழ்வாதார நிவாரண நிதி ( 7.5 மாதங்களுக்கு இரண்டாம் கட்டமாக) ரூ.16 கோடியே 38 லட்சத்துக்கு 41 ஆயிரத்துக்கு 670, 3,354 மீனவா்களின் வங்கிக் கணக்கில் வருகிற 28-ஆம் தேதி முதல் செலுத்தப்பட உள்ளது.

விடுபட்ட மீனவா்களுக்கு போதிய ஆவணங்கள் பெறப்பட்டு, ஆய்வு செய்த பிறகு வாழ்வாதார நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com