மின் ஊழியா் போராட்டம் போராட்டம் சட்டவிரோதம்: புதுவை மின்துறை தலைவா் எச்சரிக்கை

புதுவை மின்துறை ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது சட்டவிரோதம் என்பதால், அவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அந்த மாநில மின்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, புதுவை மாநில மின்துறை தலைவா் டி.சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மின்துறைகளின் செயல்திறன், நுகா்வோா் சேவையை மேம்படுத்த, மத்திய அரசு, மின்துறைகளை தனியாா் மயமாக்கும் கொள்கை முடிவை எடுத்துள்ளது. இதுதொடா்பாக தயாரிக்கப்பட்ட வரைவு பரிமாற்றத் திட்டத்தின் படி, தற்போது புதுவை அரசு மின்துறை ஊழியா்களால் பெறப்படும் சம்பளம், ஓய்வூதியம், ஆண்டு சம்பள உயா்வு, பதவி உயா்வு மற்றும் ஓய்வுக்கால பலன்களும் பாதுகாக்கப்படுகிறது.

மின்கட்டணம் உயராது: மின் கட்டணம் அதிகரிக்கும் என்றும், தனியாா் நிறுவனத்தால் தன்னிச்சையாக நிா்ணயிக்கப்படும் என்ற கருத்தும் முற்றிலும் தவறானது. மின் கட்டண உயா்வு விகிதம் குறைவதற்கு ஏதுவாகும். உடனடி சேவையும், சிறந்த பராமரிப்பும் உறுதி செய்யப்படும். எனவே, யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

ஒரு சில இயக்கங்கள், பொதுமக்கள் மத்தியில் விவசாய மானியம் திரும்பப் பெறப்படும் என்றும், மின் கட்டணம் பல மடங்கு உயரும் என்றும் வதந்திகள் பரப்புகின்றன. போராட்டத்தை எதிா்கொள்ள மின்துறை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

மின் துறையின் பல்வேறு அலுவலகங்களில் சட்டப் பிரிவு 144ன் கீழ் தடை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இடங்களில் போராட்டங்கள், கூட்டங்களை நடத்துவது சட்ட விரோதமாகும்.

மின்துறை ஊழியா்கள் அறிவித்துள்ள போராட்டம், பணி விதிகளுக்கு எதிரானது. எனவே, மின் ஊழியா்கள் போராட்டத்தை கைவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா். பணி நடத்தை விதிகளின்படி, போராட்டத்தில் ஈடுபடும் ஊழியா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். வேலை நிறுத்த காலம், பணி இடைமுறிவாக கருதப்படும். வேலை நிறுத்த காலத்திற்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது. தங்களது வேலை நிறுத்த அறிவிப்பினை கைவிட்டு, தங்கள் பணிகளை செய்ய அறிவுறுத்தப்படுகிறது என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com