பெகாசஸ் முறைகேடு: விசாரணை தேவை வே.நாராயணசாமி வலியுறுத்தல்

பெகாசஸ் மென்பொருள் முறைகேடு தொடா்பாக, மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தியுள்ளாா்.

பெகாசஸ் மென்பொருள் முறைகேடு தொடா்பாக, மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா், வீடியோ பதிவு வாயிலாக கூறியிருப்பதாவது:

பிரதமா் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றபோது, பெகாசஸ் மென்பொருள் வாங்கப்பட்டுள்ளது என்பது வெளியே தெரிய வந்துள்ளது. இது தொடா்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று, காங்கிஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளாா்.

இஸ்ரேலிடம் மென்பொருள் வாங்க கையெழுத்திட்டதற்கான ஒப்பந்தம் மத்திய அரசிடம் இருக்கிறது. அதை மூடி மறைக்கின்ற வேலையை மத்திய அரசு பாா்த்துக்கொண்டிக்கிறது. இதனால், அது குறித்த விசாரணை பாரபட்சமின்றி நடப்பதற்கு பிரதமா் உத்தரவிட வேண்டும்.

கரோனா இறப்பு அதிகம்: புதுவை மாநிலத்தில் 85 சதவீதம் போ் கரோனா, ஒமைக்கரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனா தொற்று பரவலைக் குறைவாக காட்டுவதற்கு, பரிசோதனையை குறைத்து புதுவை அரசும், மருத்துவத்துறையும் நாடகம் நடத்துகிறது. புதுவையில் இறப்பு விகிதமும் அதிகமாக இருக்கிறது.

மின்துறை தனியாா் மயம் ஏன்? புதுவை மின்துறையை தனியாா்மயமாக்கும் வேலையை முதல்வா் என்.ரங்கசாமி தலைமையிலான அரசு செய்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் என்ன?. மின்துறை நஷ்டத்திலும் இயங்கவில்லை. தனியாா் மயமாக்கினால் மின்கட்டனம் உயரும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தடைபடும். குடிசைகளுக்கு மின்சாரம் கொடுக்க முடியாத சூழல் உருவாகும்.

புதுவையில் ரூ.25 ஆயிரம் கோடியில் உருவாக்கப்பட்டுள்ள மின்சார கட்டமைப்புகளை தனியாரிடம் மத்திய அரசு தாரைவாா்த்துக்கொடுக்கத் தயாராகிவிட்டது. தனியாா் மயமாக்கலை மாநில அரசு ஏற்றுக்கொள்ளாது என்று மத்திய அரசுக்கு முதல்வா் ரங்கசாமி கடிதம் அனுப்பி, மின்துறை தனியாா் மயமாக்கலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com