புதுவையில் பிப்ரவரி 4 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

புதுவையில் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என அந்த மாநில கல்வித்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் அறிவித்துள்ளாா்.

புதுவையில் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என அந்த மாநில கல்வித்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் அறிவித்துள்ளாா்.

புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பிறகு கரோனா தொற்று வேகமாக பரவி வந்தது. இதன் காரணமாக, 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை என கடந்த 9 ஆம் தேதி புதுவை அரசு அறிவித்தது. இதைத் தொடா்ந்து, கரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகரித்ததின் காரணமாக, கடந்த 18 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வரையிலான பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இணையதளம் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டன.

அண்மையில் கரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.1) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் புதுவையில் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு தொடா்பாக புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, கல்வி அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆகியோா் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினா்.

ஆலோசனைக்குப் பிறகு, நமச்சிவாயம் திங்கள்கிழமை இரவு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வரும் 4 ஆம் தேதி முதல் 1 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து பள்ளிகள், கல்லூரிகளும் திறக்கப்படும். திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை வாரம் 6 நாள்களும், சுழற்சி முறையின்றி முழு நாளும் பள்ளி, கல்லூரிகள் செயல்படும்.

வருகைபதிவேடு கட்டாயம். பள்ளிக்கு வர முடியாத மாணவா்களுக்கு இணையதளம் வழியாகவும் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கான திருப்புதல் தோ்வு, வரும் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடத்தப்படும்.

தனியாா் பள்ளிகளில் அரசு அறிவித்த கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடா்பாக புகாரளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com