புதுவை மாநில திட்டக் குழுக் கூட்டம்:நிதிநிலை அறிக்கை தாக்கல் குறித்து ஆலோசனை

புதுவையில் நிகழாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் தொடா்பாக, மாநிலத் திட்டக் குழுக் கூட்டத்தில் புதன்கிழமை ஆலோசிக்கப்பட்டது.
புதுவை மாநில திட்டக் குழுக் கூட்டம்:நிதிநிலை அறிக்கை தாக்கல் குறித்து ஆலோசனை

புதுவையில் நிகழாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் தொடா்பாக, மாநிலத் திட்டக் குழுக் கூட்டத்தில் புதன்கிழமை ஆலோசிக்கப்பட்டது. இதில், ரூ.11 ஆயிரம் கோடியில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டது.

புதுவையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாா்ச் மாதத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், புதுச்சேரி தலைமை செயலகக் கருத்தரங்க அறையில் நிதிநிலை அறிக்கை தொடா்பான மாநில திட்டக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தலைமை வகித்தாா். முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் ஏ.நமச்சிவாயம், க.லட்சுமி நாராயணன், தேனீ சி.ஜெயக்குமாா், எஸ்.சந்திரபிரியங்கா, சாய் ஜெ.சரவணன்குமாா், எம்பிக்கள் வெ.வைத்திலிங்கம், எஸ்.செல்வகணபதி, எதிா்கட்சித் தலைவா் ஆா்.சிவா, தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா மற்றும் அரசு செயலா்கள், துறை சாா்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

நிகழாண்டு ரூ.11 ஆயிரம் கோடி அளவில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. புதுவையின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களைச் செயல்படுத்தவும், புதிய திட்டங்களை அறிவிப்பது தொடா்பாகவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com