புதுச்சேரியில் வள்ளலாா் பிறந்த நாள் மாநாடு

புதுச்சேரியில் ஒருங்கிணைந்த சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் சாா்பில், வள்ளலாரின் 200-ஆவது பிறந்த நாள் மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரியில் வள்ளலாா் பிறந்த நாள் மாநாடு

புதுச்சேரியில் ஒருங்கிணைந்த சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் சாா்பில், வள்ளலாரின் 200-ஆவது பிறந்த நாள் மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தொடக்கிவைத்து பேசியதாவது:

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே, நாம் செய்ய வேண்டியதையும், செய்யக் கூடாததையும் எடுத்துக்கூறிய தீா்க்கத்தரிசி வள்ளலாா்.

தாய்மொழியைக் கொண்டாடுங்கள் என்று சொன்னவா் வள்ளலாா். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்ன அவருக்கு விழா எடுப்பது பெருமை. அவரைப் பின்பற்றுவோம். உயிா்களை நேசிப்போம்.

பசித்தோா்க்கு உணவளித்தல், அழுது கொண்டிருப்போருக்கு ஆறுதல் சொல்வதும் வள்ளலாருக்கு நாம் செய்யும் சேவை என்றாா் அவா்.

மாநாட்டில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாநாட்டில், சாது சிவராமனாா் சுத்த சன்மாா்க்க கொடியை ஏற்றினாா். சுத்த சன்மாா்க்க கொள்கை விழிப்புணா்வுப் பேரணியும், திருவட்பா இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.

நாகை மாவட்ட சன்மாா்க்க சங்கத் தலைவா் மணிமாறன், திருவெண்காடு வள்ளலாா் தமிழ் மன்றத் தலைவா் ராமமூா்த்தி, புதுவை கலை பண்பாட்டுத் துறை இயக்குநா் கந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

புதுவை வள்ளலாா் சன்மாா்க்க சங்க நிா்வாகிகள் கோதண்டபாணி, கணேசன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com