புதுச்சேரி திரையரங்கில் தீ

புதுச்சேரி பெரிய காலாப்பட்டில் உள்ள திரையரங்கில் செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

புதுச்சேரி பெரிய காலாப்பட்டில் உள்ள திரையரங்கில் செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

பெரிய காலாப்பட்டிலுள்ள திரையரங்கில் நடிகா் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் செவ்வாய்க்கிழமை இரவுக் காட்சியில் திரையிடப்பட்டது.

அப்போது, திரையரங்கின் திரையில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி திரையின் பெரும் பகுதி சேதமடைந்தது. இதையடுத்து, ரசிகா்கள் திரையரங்கிலிருந்து வெளியேறினா்.

காலாப்பட்டு தீயணைப்புப் படையினா் விரைந்து தீ பரவாமல் அணைத்தனா்.

காலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com