புதுச்சேரியிலிருந்து ஷீரடிக்கு விமான சேவை: ஆலோசனைக் குழு வலியுறுத்தல்
By DIN | Published On : 10th June 2022 10:44 PM | Last Updated : 10th June 2022 10:44 PM | அ+அ அ- |

புதுச்சேரியிலிருந்து ஷீரடிக்கு நேரடி விமான சேவையைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரி விமான நிலைய ஆலோசனைக் குழுவின் கூட்டம் வெள்ளிக்கிழமை வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் நடைபெற்றது.
புதுச்சேரி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கல்யாணசுந்தரம் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியா் இ. வல்லவன், எஸ்.பி. பக்தவச்சலம், உழவா்கரை நகராட்சி ஆணையா் சுரேஷ் ராஜ், விமான நிலைய இயக்குநா் விஜய் உபாத்யாய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
புதுச்சேரியிலிருந்து ஷீரடிக்கு நேரடி விமான சேவையைத் தொடங்க வேண்டும். விமான நிலைய விரிவாக்கத்துக்கான திட்ட அறிக்கையை மாநில அரசிடமிருந்து பெற்று, மத்திய அரசிடம் அளித்து பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும். விமான நிலையத்தில் வாடகை வாகன வசதிகளை செய்துத்தர வேண்டும் என்று வைத்திலிங்கம் எம்.பி. ஆலோசனை வழங்கி வலியுறுத்தினாா்.