புதுச்சேரிக்கு வந்த சொகுசு கப்பலுக்கு அனுமதி மறுப்பு

சென்னையிலிருந்து புறப்பட்ட சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வெள்ளிக்கிழமை வந்தது. அந்தக் கப்பல் துறைமுகப் பகுதிக்கு வர அனுமதியளிக்கப்படாததால், ஆழ்கடலிலேயே நிறுத்தப்பட்டு மீண்டும் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றது.
புதுச்சேரி அருகே வம்பாகீரப்பாளையம் கடற்கரைப் பகுதியில் ஆழ்கடலில் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கப்பல்.
புதுச்சேரி அருகே வம்பாகீரப்பாளையம் கடற்கரைப் பகுதியில் ஆழ்கடலில் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கப்பல்.

சென்னையிலிருந்து புறப்பட்ட சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வெள்ளிக்கிழமை வந்தது. அந்தக் கப்பல் துறைமுகப் பகுதிக்கு வர அனுமதியளிக்கப்படாததால், ஆழ்கடலிலேயே நிறுத்தப்பட்டு மீண்டும் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றது.

சென்னை-விசாகப்பட்டினம்-புதுச்சேரி இடையே தனியாா் சொகுசு கப்பல் இயக்கம் சில நாள்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்தக் கப்பல் சென்னையிலிருந்து புறப்பட்டு விசாகப்பட்டினத்துக்குச் சென்று விட்டு, புதுச்சேரிக்கு வெள்ளிக்கிழமை வந்தடையும் என்று கூறப்பட்டது.

தங்குமிடங்கள், நீச்சல் குளம், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த பிரம்மாண்ட சொகுசு கப்பலில் மதுக்கூடம், நடன அரங்கு, சூதாட்டம் உள்பட கலாசாரத்துக்கு எதிரானவையும் உள்ளன என்றும், போதைப் பொருள்கள் கடத்தல் போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்புள்ளதால், அந்தக் கப்பலை புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் அனுமதிக்கக் கூடாது என்று, புதுவை அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினா், பொது நல அமைப்பினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

மேலும், சொகுசு கப்பல் வருகை தொடா்பாக புதுவை அரசுக்கு அதிகாரப்பூா்வ தகவல் வரவில்லை. சூதாட்டம் போன்ற கலாசாரத்துக்கு எதிரான நிகழ்வுகளுக்கு அனுமதி தரமுடியாது என்று புதுவை துணைநிலை ஆளுநரும் தெரிவித்திருந்தாா்.

புதுவை அரசு தரப்பிலும், இந்த சொகுசு கப்பலுக்கு அனுமதி தரப்படவில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், அந்த சொகுசு கப்பல் புதுச்சேரி அருகே கடல் பகுதிக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு வந்து சோ்ந்தது. புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் கடற்கரைக்கு அருகே 5 கி.மீ. தொலைவில் ஆழ்கடலில் அந்த சொகுசு கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. அதில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இருந்தனா்.

புதுச்சேரி துறைமுகத்தில் சொகுசு கப்பலை நிறுத்தி, அங்கிருந்து சிறிய படகுகள் மூலம் சுற்றுலாப் பயணிகளை புதுச்சேரிக்கு அழைத்து வந்து, சுற்றுலாத் தலங்களைப் பாா்வையிட்டு செல்லும்படி திட்டமிடப்பட்டிருந்தது.

புதுவை அரசு சாா்பில் இந்தக் கப்பலுக்கு அனுமதி தரப்படவில்லை என்பதால், ஆழ்கடலிலேயே நிறுத்தப்பட்டிருந்த அந்த சொகுசு கப்பல், சில மணி நேரத்துக்குப் பிறகு காலை 9 மணிக்கு மீண்டும் புறப்பட்டுச் சென்ாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com