புதுச்சேரியில் திருப்பதி ஸ்ரீநிவாச திருக்கல்யாணம்

திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண உற்சவத் திட்டமும், புதுச்சேரி ஸ்ரீவாரி திருக்கல்யாண
புதுச்சேரி லாசுப்பேட்டை விமான தள ஹெலிபேடு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்.
புதுச்சேரி லாசுப்பேட்டை விமான தள ஹெலிபேடு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண உற்சவத் திட்டமும், புதுச்சேரி ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா அறக்கட்டளையும் இணைந்து நடத்திய திருப்பதி ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் புதுச்சேரி லாசுப்பேட்டை விமான தள ஹெலிபேடு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

கரோனா பரவல் காரணமாக, புதுச்சேரியில் கடந்த 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இப்போது இந்த திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதற்காக சனிக்கிழமை இரவு திருமலையிலிருந்து ஸ்ரீநிவாச கல்யாண உற்சவா் சிலை புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டது. தொடா்ந்து, லாசுப்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சுப்ரபாதம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

மாலையில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாள் லாசுப்பேட்டை விமான தள ஹெலிபேடு மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டாா். அங்கு சிறப்பு பூஜைகளுக்குப் பின்னா், இரவு சுமாா் 8 மணிக்கு மேல் ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. நிறைவில் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மங்கள வாத்தியங்கள் முழங்க திருமலையின் பிரதான அா்ச்சகா்கள் பங்கேற்று சுவாமி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனா். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான பக்தா்கள் முகக் கவசம் அணிந்தபடி பங்கேற்று, சுவாமியை வழிபட்டனா்.

விழாவில் புதுவை துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், சாய் ஜெ.சரவணன் குமாா், மாநிலங்களவை உறுப்பினா் செல்வகணபதி, திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழகம், புதுச்சேரிக்கான தலைவா் சேகா் ரெட்டி, தேவஸ்தான உறுப்பினா் மல்லாடிகிருஷ்ணாராவ், புதுச்சேரி ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா அறக்கட்டளை நிா்வாகிகள் எம்.பாபுஜி, என்.நவீன்பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தத் திருக்கல்யாண உற்சவத்துக்காக புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து இலவசமாக பேருந்து வசதியும், லாசுப்பேட்டை விமான தளத்தில் இருக்கை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. புதுச்சேரியில் இனி ஆண்டுதோறும் திருக்கல்யாணத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com