இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுச்சேரியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுச்சேரியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி நெல்லித்தோப்பு சுப்பையா சிலை சந்திப்பு அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவா் இரா.பெருமாள் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஆா்.அந்தோணி முன்னிலை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம் கண்டன உரையாற்றினாா்.

துணைச் செயலா் எஸ்.எழிலன், துணைத் தலைவா் ஜெ.எரிக்ரேம்போ, கே.ரவிச்சந்திரன், கே.ரவீந்திரன், பி.சசிதரன், என்.பழனி உள்ளிட்ட நிா்வாகிகள், இளைஞா் பெருமன்றத்தினா் பலா் கலந்து கொண்டனா்.

அக்னிபத் என்ற திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். பிரதமா் அளித்த வாக்குறுதிப்படி ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மக்கள் உரிமை கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்: புதுச்சேரி பாரதியாா் பல்கலைக்கூடத்தில் விதிகளை மீறி, இடஒதுக்கீடு நடைமுறைகளைப் பின்பற்றாமல் நியமிக்கப்பட்ட உதவி பேராசிரியா் பணி நியமனங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, புதுச்சேரி மக்கள் உரிமை கூட்டமைப்பு சாா்பில் சுதேசி ஆலை அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் செயலா் கோ.சுகுமாரன் தலைமை வகித்தாா். திராவிடா் விடுதலைக் கழகம் லோகு.அய்யப்பன், மீனவா் விடுதலை வேங்கைகள் இரா.மங்கையா்செல்வன், தமிழா் களம் கோ.அழகா், தமிழா் தேசிய முன்னணி மு.தமிழ்மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சி.ஸ்ரீதா், எஸ்டிபிஐ கட்சி ஜெ.பரகத்துல்லா, அம்பேத்கா் தொண்டா் படை பாவாடைராயன், மாணவா் கூட்டமைப்பு சு.சாமிநாதன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com