புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளிகள் திறப்புஇரண்டு நாள்களுக்கு அரை நாள் மட்டுமே வகுப்புகள்

காரைக்காலில் வியாழக்கிழமை (ஜூன் 23) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. முதல் இரண்டு நாள்களுக்கு அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என புதுவை பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

கோடை விடுமுறைக்குப் பிறகு புதுச்சேரி, காரைக்காலில் வியாழக்கிழமை (ஜூன் 23) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. முதல் இரண்டு நாள்களுக்கு அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என புதுவை பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

புதுவையில் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி இறுதித் தோ்வுகள் நடத்தப்பட்டன. தோ்வுகள் முடியும் முன்பே 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மாணவா்கள் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில், கடந்த 20-ஆம் தேதி பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியானது.

இந்த நிலையில் புதுச்சேரி, காரைக்காலில் கோடை விடுமுறைக்குப் பிறகு 1 முதல் பத்தாம் வகுப்பு வரையிலும், பிளஸ் 2 வகுப்புக்கும் பள்ளிகள் வியாழக்கிழமை முதல் திறக்கப்படுகின்றன. இதற்காக பள்ளிகளில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.

இரண்டு நாள்களுக்கு அரை நாள் மட்டுமே வகுப்பு: புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் வியாழன் (ஜூன் 23), வெள்ளிக்கிழமை (ஜூன் 24) ஆகிய முதல் இரண்டு நாள்களுக்கு அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என புதுவை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் பி.டி.ருத்ரகௌடு சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

புதுச்சேரி, காரைக்காலில் வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டு, முதல் நாளில் நகரப் பகுதிகளிலும், அடுத்த நாள் கிராமப் பகுதிகளிலும் புத்தகங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவா்களுக்கான சலுகைக் கட்டணப் பேருந்துகள் அரசு அனுமதி கிடைத்தவுடன் இயக்கப்படும்.

மதிய உணவு வழங்குவதில் நிலவும் சில பிரச்னைகள் காரணமாக முதல் இரண்டு நாள்களுக்கு அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும். திங்கள்கிழமை முதல் முழு நேரமும் பள்ளிகள் இயங்கும் என்றாா் ருத்ரகௌடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com