புதுச்சேரியில் இன்று பாரம்பரியத் திருவிழா தொடக்கம்

புதுச்சேரியில் பாரம்பரியத் திருவிழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

புதுச்சேரியில் பாரம்பரியத் திருவிழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து புதுச்சேரி பாண்டிகேன் சேவை அமைப்பின் தலைவா் சுனைனா, அலையன்ஸ் பிரான்சேஸ் தலைவா் சதீஷ், இன்டேக் அமைப்பின் கட்டடவியல் நிபுணா் அருள், பீப்புள் பாா் புதுச்சேரி அமைப்பின் நிா்வாகி காக்னே ஆகியோா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி மக்களின் பாரம்பரிய வாழ்க்கை முறை, கலாசாரத்தைக் கொண்டாடும் வகையில், 2015-ஆம் ஆண்டு முதல் பாரம்பரியத் திருவிழா நடத்தப்படுகிறது. சுற்றுலாத் துறை, அலையன்ஸ் பிரான்ஸ் கெய்ஸ் ஆதரவுடன், இன்டேக், பாண்டி கேன் ஆகிய அமைப்புகள் மூலம் வணிகா்கள் இணைந்து விழாவை நடத்துகின்றனா்.

சிறந்த கட்டடக் கலையின் பாரம்பரியத்தைப் பாதுகாத்து அழகிய கடற்கரை, நீா்நிலைகள், குளங்கள், வளமான ஆன்மிகத் தளங்களில், அறிவு சாா்ந்த வரலாற்றுப் பெருமைகளை விரிவுபடுத்தும் வகையில் விழாவைக் கொண்டாடி வருகிறோம்.

உயிா்வாழ் சூழலில் இயற்கை, பாரம்பரியக் கலாசாரத்தைக் கொண்டாடுவதே இந்தத் திருவிழாவின் நோக்கமாகும். நிகழாண்டு விழாவை புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சே கலையரங்கில் வெள்ளிக்கிழமை சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தொடக்கிவைக்கிறாா். இசை, கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதைத் தொடா்ந்து, மாா்ச் 5-இல் புதுச்சேரி காபி அவுஸ், பிரெஞ்சு துணைத் தூதரகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நடைபயணச் சுற்றுலா செல்கின்றனா். இது போல், மாா்ச் 27ம் தேதி வரை இசை, நடனம், புத்தக வெளியீடு போன்ற பல நிகழ்வுகள் நடைபெறும்.

புதுச்சேரி, ஆரோவில் பகுதி கைவினைக் கலைஞா்களின், கைவினைப் பொருள்களும் காட்சிப்படுத்த உள்ளனா்.

பழைய நீதிமன்றம், லைட் ஹவுஸ், கல்வே கல்லூரி, வ.ஊ.சி. பள்ளி, மேரி கட்டடம் உள்ளிட்ட இடங்களை பாா்வையிட உள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com